சான்றோர் சந்திப்பு – வாரம் 7

சான்றோர் சந்திப்பு – வாரம் 7

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் ஏழாவது நிகழ்வாக, கலைமகள் இதழின் ஆசிரியர் கலைமாமணி திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Date : Saturday, 11th July 2020
Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 10PM (Tokyo)

Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229

Meeting ID: 882 3310 2574
Password: 765765

ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: contact@tamilstudiesuk.org

நிகழ்வுச்சுருக்கம்

கலைமாமணி. திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (ஆசிரியர் கலைமகள் இதழ்) அவர்களது சந்திப்பு, ‘தமிழ் தாத்தா – கண்டதும் கேட்டதும்‘ என்ற தலைப்பில் அருமையான ‘கேள்வி-பதில்’ நிகழ்ச்சியாக மலர்ந்தது. ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சார்பான நெறியாளர், திரு.சுரேசு குமார் அவர்களது உ.வே.சா பற்றிய தொடர் கேள்விகளுக்கு, திரு. கீழாம்பூர் – சரளமாக, மடை திறந்த வெள்ளம் போல பதில் அளித்தார். இரண்டாம் உலகப் போர் சமயம் தனது சொந்த உடமைகளை விடுத்து, தமிழ் ஒலைச் சுவடிகளை அதன் மதிப்பு கருதி, சென்னையை விட்டு மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்று , உ.வே.சா அவர்கள் சேதமில்லாமல் காத்தது, மகாத்மா காந்தியுடனான சந்திப்பு என பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டு நிகழ்வை மேலும் சுவையாக்கினார்.